2வது ஒரு நாள் போட்டியில் இந்தியாவுடனான தோல்விக்கு பின் கேப்டன் ஷனகாவிடம் பயிற்சியாளர் மைதானத்திலே வாக்குவாதத்தில் ஈடுபட்டது குறித்து இலங்கை ஜாம்பவான் முத்தையா முரளிதரன் கருத்து தெரிவித்துள்ளார்.
ஆர்தர் அமைதியாக புதிய கேப்டனிடம் தனது கருத்தை தெரிவித்திருக்க வேண்டும் என்று முரளிதரன் கூறினார்.
இந்திய வீரர்களை இறுதிவரை விளையாடி விட்டு வெற்றி பெற விட்டதற்கு பதிலாக இலங்கை அணி சிறந்த பந்த பந்து வீச்சாளரை பந்து வீச சொல்லி விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்க வேண்டும்.
7 விக்கெட் சரிந்து விட்டது, இன்னும் ஒரு விக்கெட் எடுதத்திருந்தால் போட்டி இலங்கை வசம் இருந்திருக்கும், ஆனால் அவர்களுக்கு வெற்றிகான வழி தெரியவில்லை, அவர்களை அதை மறந்துவிட்டனர், வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டிய இலங்கை கிரிக்கெட்டுக்கான கடினாமான நேரம் இது.
இலங்கை அணி சில தவறுகளை செய்தது, இலங்கை அணி Wanindu Hasaranga-வை கடைசி ஓவருக்காக வைத்திருக்காமல், அவரை பந்து வீச வைத்து விக்கெட்டுகளை கைப்பற்ற முயற்சி செய்திருக்க வேண்டும்.
ஒரு விக்கெட்டை எடுத்திருந்தால் இந்திய அணி கடைசி ஓவரில் திணறியிருக்கும், ஆனால் அனுபவம் இல்லாத இலங்கை அணி சில தவறுகளை செய்துவிட்டது என முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
Source: https://news.lankasri.com/article/muralitharan-reacts-to-mickey-arthur-1626942019