
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் தொடக்க சுற்றில் சிமோனா ஹாலெப் வெற்றிபெற்றார்.
நியூயார்க்,
ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாமான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நேற்று தொடங்கியது. இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான சிமோனா ஹாலெப் (ருமேனியா) 6-4, 7-6 (7-3) என்ற நேர்செட்டில் 36-ம் நிலை வீராங்கனையான கமிலா ஜியார்ஜியை (இத்தாலி) வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்ற ஆட்டங்களில் கார்பின் முகுருஜா (ஸ்பெயின்), கயா கனேபி (எஸ்தோனியா) ஆகியோர் வெற்றியை ருசித்தனர்.