
கடந்த ஞாயிறன்று டோக்கியோவில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டில் சோக சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. குதிரைகள் தடை தாண்டி ஓடும் பந்தயத்தில், சுவிஸ் வீரரான Robin Godel என்பவர், Jet Set என்ற பெயர் கொண்ட தனது குதிரையை செலுத்திக்கொண்டிருந்தார்.
தடைகளை தாண்டி ஓடும்போது திடீரென அந்த குதிரையின் கால்களில் அடிபட, பந்தயம் உடனடியாக நிறுத்தப்பட்டது.
வேகமாக குதிரைகளில் வந்த மற்ற வீரர்கள் ஆங்காங்கு நிறுத்தப்பட, கால்நடை மருத்துவர்கள் விரைந்து வந்து Jet Setஐ பரிசோதித்தார்கள். அடி பலமாக இருக்கவே, ஆம்புலன்ஸ் மூலம் அந்த குதிரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
மருத்துவமனையில் எடுக்கப்பட்ட ஸ்கேனில், குதிரையின் தசை நார்கள் சரி செய்ய இயலாத அளவுக்கு கிழிந்திருப்பது தெரியவந்தது. ஆகவே, வேறு வழியில்லாமல் Jet Setஐ கருணைக்கொலை செய்வதென முடிவு செய்யப்பட்டது.
உரிமையாளர்கள் மற்றும் குதிரையை செலுத்தும் Robin Godel ஆகியோரின் அனுமதியுடன் Jet Set கருணைக்கொலை செய்யப்பட்டது. தனது குதிரை கருணைக்கொலை செய்யப்பட்டதால் சோகமுற்ற Robin Godel, தான் சிறிது காலத்துக்கு சமூக ஊடகங்களிலிருந்து விலகியிருக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.
Source: https://news.lankasri.com/article/horse-racing-abruptly-stopped-1627971606