
இளவேனில் வாலறிவன் மொத்தம் 626.5 புள்ளிகள் மட்டுமே எடுத்து 16 ஆம் இடத்தை பிடித்தார். இதனால், இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தார்.
டோக்கியோ ஒலிம்பிக் பெண்கள் 10 மீ ஏர் ரைஃபிள் துப்பாக்கி சுடுதல் போட்டி இந்திய நேரப்படி இன்று காலை 5 மணிக்கு நடைபெற்றது.
இந்தியா சார்பில் தமிழகத்தின் இளவேனில் வாலறிவன் மற்றும் அபூர்வி சந்தேலா ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் வாலறிவன் மொத்தம் 626.5 புள்ளிகள் மட்டுமே எடுத்து 16 ஆம் இடத்தை பிடித்தார். இதனால், இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தார்.
மற்றொரு வீராங்கனை அபூர்வி சந்தேலா மொத்தம் 621.9 புள்ளிகள் பெற்று 36-ம் இடத்தை பிடித்தார். இதனால் அவரும் இறுதிபோட்டி வாய்ப்பை இழந்தார். நார்வே வீராங்கனை ஜீனேட் ஹெக் டியூஸ்டாட் 632.9 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தார். கொரிய வீராங்கனை 631.7 புள்ளிகள் பெற்று 2-வது இடம் பிடித்தார்.