
டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் 100 மீட்டர் பட்டர்பிளை பிரிவு நீச்சல் போட்டியில் அமெரிக்க வீரர் கேலப் டிரஸ்ஸல் தங்கப் பதக்கம் வென்றார்.
டோக்யோ ஒலிம்பிக்கில் நீச்சல் போட்டிகள் நிறைவடைந்துள்ளன. மொத்தம் 30 பிரிவுகளில் நடந்த நீச்சல் போட்டியில் அமெரிக்கா 8 தங்கம் மற்றும் தலா 9 வெள்ளி, வெண்கலம் என 26 பதக்கங்களை வென்றுள்ளது. அதிகபட்சமாக காலெப் டிரஸ்ஸல் 5 தங்கப் பதக்கங்களை வசப்படுத்தியுள்ளார். நடப்பு ஒலிம்பிக் தொடரில் அதிக பதக்கங்கள் வென்றவர்களுக்கான பட்டியலிலும் டிரஸ்ஸல் முதலிடத்தில் நீடிக்கிறார்.
அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியா 7 தங்கம் உட்பட 18 பதக்கங்களை வென்றுள்ளது. அந்நாட்டின் எம்மா மெக்கான் 4 தங்கம் மற்றும் 3 வெண்கலம் என பங்கேற்ற 7 போட்டிகளிலும் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்காவின் கேட் லெடிக்கி 2 தங்கம், 2 வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளார்.
Source: https://tamil.news18.com/news/live-updates/americans-top-swimming-medal-table-with-11-golds-and-30-total-vai-520531.html