
குறைந்த தூர ஓட்டப்பந்தயத்தில் தங்கள் ஆதிக்கத்தை ஜமைக்கா நாட்டினர் மீண்டும் நிரூபித்துள்ளனர்.
டோக்யோ ஒலிம்பிக்கில் மகளிருக்கான 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 3 பதக்கங்களையும் கைப்பற்றி ஜமைக்கா வீராங்கனைகள் அசத்தியுள்ளனர்.
இறுதிச் சுற்றில் 8 பேர் பங்கேற்ற இந்தப் போட்டியில், 100 மீட்டர் தூரத்தை 10 புள்ளி 61 நொடிகளில் கடந்து ஜமைக்காவின் எலைன் தாம்சன் ஹெரா புதிய ஒலிம்பிக் சாதனையை படைத்தார். அத்துடன் ரியோ ஒலிம்பிக்கை தொடர்ந்து இந்த ஒலிம்பிக்கிலும் அவர் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

இவருக்கு அடுத்ததாக 10.74 நொடிகளில் இலக்கை எட்டிய சக நாட்டு வீராங்கனையான Fracer Pricey வெள்ளி வென்றார். ஒலிம்பிக் 100 மீட்டர் ஓட்டத்தில் இது அவருக்கு நான்காவது பதக்கமாக அமைந்தது. 3-வது இடத்தையும் ஜமைக்காவின் ஷெரிக்கா பிடித்ததால், 3 பதக்கங்களையும் கைப்பற்றி குறைந்த தூர ஓட்டப்பந்தயத்தில் தங்கள் ஆதிக்கத்தை ஜமைக்கா நாட்டினர் மீண்டும் நிரூபித்துள்ளனர்.
Source: https://tamil.news18.com/news/sports/tokyo-olympics-jamaica-win-top-3-medal-in-women-100m-running-tmn-520445.html