
மும்பை-ஆபாச படம் எடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும், தொழிலதிபருமான ராஜ் குந்த்ரா மற்றும் அவருடைய கூட்டாளி ரயான் தோர்ப் தாக்கல் செய்த மனுக்களை, மும்பை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சினிமா வாய்ப்பு கேட்டு வந்த இளம்பெண்களை மிரட்டியும், கட்டாயப்படுத்தியும் ஆபாசமாக படம் எடுத்து இணையதளத்தில் வெளியிட்டதாக பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா மீது பல பெண்கள் புகார் அளித்தனர்.

இதையடுத்து ராஜ் குந்த்ராவும், அவரது கூட்டாளியும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் காவலை நீட்டித்து மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, மும்பை உயர் நீதிமன்றத்தில் இருவரும் வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுக்களை உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2818880