
மதுரை: ‘கருத்து சுதந்திரத்திற்கு உட்பட்டே பேசினேன். எனக்கு ஜாமின் அனுமதிக்க வேண்டும்’ என, பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஜாதி, மத விரோத உணர்வுகளை துாண்டும் விதமாக பேசியதாக, பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது செய்யப்பட்டார். அவர், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:சமூக பணியில் ஈடுபட்டுள்ளேன். என் பேச்சு தவறாக புரிந்து கொள்ளப் பட்டு, பொய் வழக்கு பதியப்பட்டுள்ளது.

சிறுபான்மையினருக்கு ஆளுங்கட்சி தந்த தேர்தல் வாக்குறுதிகள் புறக்கணிப்பு, ஆளுங்கட்சிக்கு எதிரான கருத்துகளை வெளியிட்டது சட்டவிரோதமல்ல.கருத்து சுதந்திரத்திற்கு உட்பட்டே பேசினேன். எனக்கு இதய பிரச்னை உள்ளது. ஜாமின் அனுமதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டு உள்ளார்.
மேலும், தன் மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதித்து, வழக்கை ரத்து செய்யக் கோரி மற்றொரு மனு தாக்கல் செய்து உள்ளார். இது, விரைவில் விசாரணைக்கு வரும்.
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2818957